I am a fan of Vikram - Abishek | நான் விக்ரமின் ரசிகன் : அபிஷேக் பச்சன்!

I am a fan of Vikram - Abishek
‘நான் விக்ரமின் ரசிகன் என்றார் அபிஷேக் பச்சன். மணிரத்னம் இயக்கும் ‘ராவணன்’ படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்கிறார். அதில், ஐஸ்வர்யா ராயின் கணவனாக விக்ரம் நடிக்கிறார். விக்ரம் பற்றி அபிஷேக்கிடம் கேட்டபோது கூறியதாவது:

நான் விக்ரமின் மிகப்பெரிய ரசிகன். பிதாமகன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். முதன்முதலில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ பட பாடல் வெளியீட்டு விழாவில்தான் விக்ரமை சந்தித்தேன். அப்போது ‘யுவா’ (ஆயுத எழுத்து) படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அவரிடம், நீங்கள் நடித்த ‘தூள்’ படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன்’ என்றேன். அவர் ஆச்சரியமாக சிரித்தார். இதைத்தொடர்ந்து நட்பு வளர்ந்தது. அடிக்கடிப்பேசிக்கொண்டிருந்தோம். சென்னை வரும் போது, சந்திப்போம். நடிப்பு, படங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ‘ராவணன்’ படத்தில் நடிக்க விக்ரம் சம்மதித்துவிட்டார் என்று மணிரத்னம் சொன்னதுமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.

Comments

Most Recent