Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Ka...
Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview Kalavani Movie Preview
தஞ்சை வட்டார வழக்கையும், வாழ்க்கையையும் முழுக்க முழுக்க பதிவு செய்கிற முதல் தமிழ் திரைப்படமாக உருவாகியிருக்கிறதாம் களவாணி. இதற்காகவே மலைகள் நிரம்பிய பின்னணி கொண்ட பொள்ளாச்சி, அம்பாசமுத்திரம், தேனி உள்ளிட்ட லொகேஷன்களை தவிர்த்து நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் களவாணி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பினையும் முடித்ததாக கூறுகிறார் இயக்குனர் ஏ.சற்குணம். இவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர்தான் என்பது சிறப்பு.
மணிரத்னத்தின் மெட்ரோ டாக்கீஸ் பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவரும், மாதவன் - த்ரிஷா உள்ளிட்டவர்களின் கால்ஷீட் காரியதரிசியுமான நசீர் தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்து இப்படம் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். மாதவன் - த்ரிஷா விடுத்து பசங்க விமல், புதுமுகம் ஓவியா அலைஸ் ஹெலன் இருவரையும் நாயகன் - நாயகியாக ஆக்க காரணம் கதைதானாம். மாதவனுக்காக கதை சொல்ல வந்த சற்குணத்திடம், தான் தயாரிப்பாளர் ஆகப்போகிறேன்... வேறு கதை இருக்கிறதா? என கேட்டிருக்கிறார் நசீர். அதற்கு களவாணி கதையை கூறி இருக்கிறார் இயக்குனர். கதை பிடித்திருந்ததால் அட்வான்சை கொடுத்து அக்ரிமெண்ட்டை போட்ட நசீர் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். சமீபமாக சத்யம் திரையரங்கில் மணிரத்னம் தலைமையில் ஆடியோ ரீலிஸ் கண்ட களவாணி விரைவில் ரீலிசுக்கும் தயார்.
Comments
Post a Comment