Kamal speech at Y Ge Mahendiran golden jubilee function | சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்?-கமல்ஹாஸன்

http://thatstamil.oneindia.in/img/2010/05/01-kamal200.jpg
நடிகர் திலகத்துக்கு யார் பெரிய ரசிகன் என்பதில் எனக்கும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் பெரிய சண்டை வரும். கடைசியில் நீதான் பெரிய ரசிகன் என்று விட்டுக் கொடுத்து விடுவேன். அது நட்புக்காக..." என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

சென்னையில் நேற்று ஒய்ஜி மகேந்திரனுக்கு நடந்த பொன்வி்ழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

"வைரமுத்துவும், நானும் சகோதரர்கள். நாத்திகத்தில் மட்டுமல்ல, பல விஷயங்களில்.

கலைஞரும், நடிகர் திலகமும் எந்த அளவுக்கு நட்புடன் பழகினார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தவன், நான். அதை என் பேரன்-பேத்திகளுக்கு கூட பெருமையாக சொல்வேன்.

சமீபத்தில் நடந்த விழாவில், நடிகர் திலகம் சிவாஜி மூச்சுவிடாமல் பேசிய வசனத்தை எழுதியது நாம்தான் என்ற எண்ணம் கூட இல்லாமல், அவர் ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாமல் ஒரே ஷாட்டில் பேசி நடித்ததை எண்ணி, கலைஞர் கண்கலங்கினார். அதைப் பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது.

கலைஞர் இப்போதும் வசனம் எழுதுவது எனக்கு ஆச்சரியம் அல்ல. அவர் எழுதாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

ஒய்.ஜி.மகேந்திரனுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். நடிகர் திலகத்துக்கு நான் பெரிய ரசிகரா, அவர் பெரிய ரசிகரா? என்பதில்தான் எங்களுக்கு சண்டை வரும். முடிவில், நீதான் பெரிய ரசிகன் என்று விட்டுக்கொடுத்து விடுவேன். அது நட்புக்காக...,'' என்றார்.

Comments

Most Recent