பாலிவுட்டில் தற்போது மிக ‘பிஸி’யான நடிகை என்றால் அது கரீனா கபூர்தான். ஒரே நேரத்தில் அவர் 7 படங்களில் நடித்து வருகிறார். கரீனா நடித்து அடுத்...
பாலிவுட்டில் தற்போது மிக ‘பிஸி’யான நடிகை என்றால் அது கரீனா கபூர்தான். ஒரே நேரத்தில் அவர் 7 படங்களில் நடித்து வருகிறார். கரீனா நடித்து அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ஏஜென்ட் வினோத்’. இதில் நிஜ வாழ்வின் காதலரான சைஃப் அலிகான்தான் கரீனாவுக்கு ஜோடி. ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இது அதிரடி ஆக்ஷன் படம்.
பர்ஹான் அக்தருடன் கரீனா முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘துருவ’ சுதீர் மிஸ்ரா இயக்குகிறார். இவை தவிர ‘கிஸ்மத் டாக்கீஸ்’, ‘கோல்மால்3’, ‘ரா&ஒன்’, ‘லவ் யூ மா’, ‘மிலேங்கே மிலேங்கே’, ‘குலேல்’ ஆகிய படங்களிலும் கரீனா நடித்து வருகிறார்.
பர்ஹான் அக்தர் கதை,திரைக்கதையில் ஜோயா அக்தர் இயக்கும் ‘கிஸ்மத் டாக்கீஸ்’ படத்தில் கரீனாவுடன் ஹரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர்.
‘கோல்மால் 3’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்த படத்தில் அர்ஷத் வர்சி, துஷார் கபூர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் ‘ரா&ஒன்’ படத்தில் கரீனாவுக்கு சூப்பர் ஹீரோயின் வேடம். ஆக்ஷன் காட்சிகளும் அவருக்கு உண்டு. போனி கபூர் தயாரிப்பில் முன்னாள் காதலர் ஷாகித் கபூருடன் கரீனா நடிக்கும் ‘மிலேங்கே மிலேங்கே’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. கரீனா, ஷாகித்தின் கால்ஷீட் கிடைத்தால் படப்பிடிப்பு ஒரே வாரத்தில் முடிந்து விடும் என்கிறார் போனி கபூர்.
அபர்னா சென் இயக்கத்தில் கரீனா கபூர் நடிக்கும் ‘குலேல்’ படத்தில் ரன்பீர் கபூர், பர்ஹான் அக்தர், ஊர்மிளா மாடோன்கர் ஆகியோரும் உள்ளனர்.
இந்த படங்கள் தவிர மணிரத்னம் இயக்கும் ‘லஜ்ஜோ’, அஷ்டவிநாயக் நிறுவனம் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகியவையும் கரீனா வசம் உள்ளது. இதில் ‘லஜ்ஜோ’ படத்தில் ஆமிர் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கரீனா.
Comments
Post a Comment