நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... செல்வமானவரு இயக்கத்துல சென் நடிச்ச படம் ரிலீசாகி, தியேட்டர்லேருந்து போன பிறகும் அவங்க...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
செல்வமானவரு இயக்கத்துல சென் நடிச்ச படம் ரிலீசாகி, தியேட்டர்லேருந்து போன பிறகும் அவங்க நட¢பு தொடருதாம்... தொடருதாம்... அடிக்கடி சந்திச்சு, நட்பை புதுப்பிக்கிறாங்களாம். இது ஆண்ட நடிகைக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்காம்... ஏற்படுத்தியிருக்காம்...
அஞ்சாத இயக்குனர் படத்துல நடிக்கிறாரு தெலுங்கு ஷா நடிகை. ஹீரோயின் வேடம்னு சொல்ல¤த்தான் நடிகையை தேர்வு பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... இப்போ திடீர்னு படத்துல ஹீரோயினே கிடையாது, ஷாவுக்கு முக்கிய ரோல் மட்டும்தான்னு சொல்றாராம்... இயக்குனர் சொல்றாராம்... இன்னொரு நடிகையையும் நடிக்க வைக்கிறாராம். இதனால ஷா, ஷாக் ஆயிட்டாராம்... ஷாக் ஆயிட்டாராம்...
இனிமே தங்கை ரோல்ல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தாரு கபடிகுழு நாயகி. ஆனா ஹீரோயின் வாய்ப்பே வரல... வரல... இதனால இப்போ முடிவை மாத்திக்கிட்டாராம்... மாத்திக்கிட்டாராம்... முதல்கட்டமா கில்லி நடிகரோட படத்துல தங்கை ரோல்ல நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...
Comments
Post a Comment