மேட்டூர்: நடிகை குஷ்பு மீது செருப்பு வீசிய வழக்கு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்...
மேட்டூர்: நடிகை குஷ்பு மீது செருப்பு வீசிய வழக்கு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முருகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக குஷ்பு மேட்டூர் வந்தபோது அவர் மீது முட்டை, தக்காளி, செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக மேட்டூர் போலீசார் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நடிகை குஷ்புவை நேரில் அழைத்து விசாரிக்கலாமா என்ற மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்தை எதிர்த்து பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட 22 வழக்குகளை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது நினைவிருக்கலாம்.
Comments
Post a Comment