ஜெயா டிவியிலிருந்து என்னை நீக்கியது குறித்து இதுவரை எனக்குத் தகவல் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. அதிமுக அனுதாபியாக பார்க்கப்ப...
ஜெயா டிவியிலிருந்து என்னை நீக்கியது குறித்து இதுவரை எனக்குத் தகவல் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
அதிமுக அனுதாபியாக பார்க்கப்பட்டாலும் குஷ்பு சமீப காலம் வரை எந்த அரசியல் கட்சியுடனும் ஒட்டாமல்தான் இருந்து வந்தார்.
ஆனால் அவர் மீதான கற்பு குறித்த பேச்சு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன் அவருக்கு திடீரென அரசியல் மீது பாசம் அதிகரித்தது. காங்கிரஸில் அவர் சேரப் போவதாக பேச்ச்சுக்கள் எழுந்தன.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தடலாடியாக திமுகவில் இணைந்து விட்டார் குஷ்பு. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏன் திடீரென திமுகவுக்குத் தாவினார் என்ற அனைவரின் கேள்விக்கும் இதுவரை தெளிவான பதில் இல்லை.
இந்த நிலையில், ஜெயா டிவியில் நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்புவை அந்த டிவி தூக்கி விட்டது.
இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் குஷ்பு. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, யார் சொன்னது என்று ஆவேசமாக கேட்டார் குஷ்பு. பின்னர் அவர் கூறுகையில், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக பார்க்கிறார்கள். நான் அப்படி ஒன்றாக பார்பதில்லை. அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை;திமுகவில் இணைந்தேன்.
என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம் தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.
முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து முடிவெடுக்கிறேன் என்றார்.
Comments
Post a Comment