Kushboo to pair up with Amitabh | அமிதாப்புக்கு ஜோடியாகும் குஷ்பு!

Kushboo is in town. The actress, who was holidaying in London, returned Chennai on Friday morning. But this time with more joy and enthusiasm, thanks to a Supreme Court verdict quashing cases against her for her comments on premarital sex.
Meanwhile, the actress has been roped in by Bollywood director Revathy Varma to act opposite Amitabh Bachchan in a Hindi film titled 'Mad Dad'. Kushboo will play the Big B's wife in the movie about the relationship between a father and his daughter.
The 39-year-old actress, who had already expressed her willingness to join politics (especially the Congress), said, "As someone who grew-up in a strongly Congress family, I have a lot of affinity for the party. I had posters of Rajiv Gandhi in my bedroom when I was a small girl."
On the apex court verdict, she said, "It was a hard fight. But I knew I would win since I was speaking the truth. I will continue to speak my mind. I know my responsibilities since I am the mother of two girl children."

அமிதாப்புடன் ஒரு இந்திப் படத்தில் ஜோடி சேருகிறார் நடிகை குஷ்பு.

ஜூன் ஆர் தமிழ் படத்தை இயக்கியவர் ரேவதி வர்மா. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

ஆப் கே லியே ஹம் என்ற இப்படத்தில் மாதவன், ஜெயாபச்சன், ரவீனா டன்டன், ஆயிஷா தாகியா நடிக்கின்றனர்.

இந்தப்படத்துக்குப் பிறகு ரேவதி வர்மா இயக்கும் புதிய இந்திப் படம் 'மேட் டாட்'.

இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து ரேவதி வர்மா கூறுகையில், "அப்பா- மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்குகிறேன். அப்பா வேடத்துக்கு அமிதாப் பச்சன்தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளேன். அவரது மனைவியாக குஷ்பு நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளேன்" என்றார் ரேவதி.

இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent