Entertainment
›
Cine News
›
Manorama stages Dharna at tirumala | திருப்பதியில் மொட்டை போட்டு தர்ணா செய்த மனோரமா!
திருப்பதி: திருமலையில் நேற்று மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்த மனோரமா, தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை தரப்படாததைக் கண்டித்து தர்ணா செய...
திருப்பதி: திருமலையில் நேற்று மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்த மனோரமா, தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை தரப்படாததைக் கண்டித்து தர்ணா செய்தார்.
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் கையில் அணிந்திருந்த வளையல், மோதிரம் போன்ற சில நகைகளையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் சிறுமியாக இருந்த போது இங்கு வந்து முடி காணிக்கை செலுத்துவதாக என் அம்மா வேண்டுதல் வைத்திருந்தார். இது வரை அதற்கு நேரம் வரவில்லை. இப்போதுதான் வந்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன். சிறிது நேரத்துக்கு முன் எவ்வளவு அழகாக இருந்த நான் இப்போது எப்படி மாறி இருக்கிறேன் பாருங்கள்..." என்றார்.
சுடிதார் அணிந்து வந்திருந்த மனோரமா, சிறப்பு விருந்தினர்களுக்கான விடுதியில் அறை கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்படவில்லை.
உடனே இதைக் கண்டித்து, நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 'ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்த எனக்கு விருந்தினர் விடுதியில் அறை கொடுக்காதது ஏன்?' என்று கேட்டார். ஆனாலும் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்படவில்லை.
Comments
Post a Comment