May - Month of Movies | இந்த மாதம் 20 படங்கள் ரிலீஸ்

 http://www.cinedust.com/wp-content/uploads/2009/05/irumbu-kottai-murattu-singam_1.jpg
கோடை விடுமுறையை குறிவைத்து, இந்த மாதம் 20 படங்கள் வரை வெளிவர இருக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. வெளியூர்கள், கோடைவாசஸ்தலங்களுக்கு அடுத்து, பொதுமக்கள் விடுமுறை கொண்டாட்டத்துக்கு தேர்ந்தெடுப்பது திரைப்படங்கள்தான். அதனால் ஆண்டுதோறும் மே மாதத்தில் அதிக படங்கள் வெளிவரும். அதன்படி இந்த ஆண்டும் 20 படங்கள் வரை வெளிவருகிறது.

வரும் 7&ம் தேதியன்று ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘குட்டிப்பிசாசு’, ‘கோரிப்பாளையம்’, ‘குரு சிஷ்யன்’ ஆகிய படங்கள் வெளிவருகிறது. 21&ம் தேதி ‘மாஞ்சாவேலு’, ‘மகனே மருமகனே’ படங்கள் வெளிவருகிறது. இது தவிர, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘வாடா’, ‘கனகவேல் காக்க’, ‘கற்றது களவு’, ‘365 காதல் கடிதங்கள்’, ‘ஐவர்’, ‘பவுர்ணமி நாகம்’, ‘குறுநில மன்னன்’, ‘மா’ ஆகிய படங்கள் மே மாதம் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில படங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் 20&க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வழக்கமாக கோடையில் குழந்தைகளைக் கவரும் ஆங்கில படங்கள், வெளிவருவதுண்டு.
இந்த ஆண்டு அப்படி எதுவும் வெளிவருவதாக அறிவிக்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘ஐயன்மேன்&2’ ஆக்ஷன் படம். இது தவிர ‘டாப்லெஸ்’ என்ற பெயரில் இந்தி படம் தமிழில் டப் செய்யப்பட்டு வர இருக்கிறது.

Comments

Most Recent