சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது....
சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. இங்கு இயக்கம், ஒளிப்பதிவு, பிராசசிங், ஒலிப்பதிவு மற்றும் சவுண்ட் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. டைரக்ஷன் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம். மற்ற படிப்புகளில் சேர பிளஸ் 2 கல்வித்தகுதி போதும். 2010 - 2011ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் (ஜுன்) 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை, கல்வித்தகுதி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044 - 22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திரைப்படக் கல்லூரியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment