பிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். க...
பிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா.
நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். இப்போது நயன்தாரா என்ற பெயரையே நிரந்தரப் பெயராக மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.
தன்னை விட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன் என்று பிரபுதேவா பஞ்சாயத்தாரிடம் உறுதியாகக் கூறியதில் நெகிழ்ந்துபோன நயன்தாரா, உடனே மதம் மாறி திருமணம் செய்து கொண்டு கள்ளக் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபுதேவாவிடம் கூறினாராம்.
ஆனால், ரம்லத் கோர்ட்டுக்குப் போனால் கம்பி எண்ண வேண்டிய நிலை இருப்பதால், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தனது குடும்பத்தினரையே ஈடுபடுத்தியுள்ளாராம்.
பிரபுதேவாவின் தந்தை சுந்தரமும் இந்தக் காதலை ஒப்புக் கொண்டு திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறது பிரபுதேவா தரப்பு. எனவே பிரச்சினை சரியான பிறகு நயன்தாராவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் பிரபுதேவா.
தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் ரம்லத்துடனும் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க வைக்க தனி வீடும் பார்த்து வருகிறாராம்.
Comments
Post a Comment