Parvathi Omanakuttan turns heroine | ஹீரோயின் ஆனார் பார்வதி ஓமணக்குட்டன்

http://www.extramirchi.com/gallery/albums/bollywood/functions/FeminaMissIndia2008/Parvathy_Omanakuttan_FeminaMissIndia2008_1.jpg
கடந்த 2008&ல் நடந்த உலக அழகி போட்டியில், இரண்டாவது இடம் பிடித்தவர் பார்வதி ஓமணக்குட்டன். அவர் ஹீரோயினாக தமிழில் நடிக்கும் படம், ‘உமா மகேஸ்வரம்’. பரத நாட்டியத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. ட்ரூ சோல் நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நிதின் ராமகிருஷ்ணா இயக்குகிறார். மலையாளத்தில் கலாபவன் மணி, விமலா ராமன் நடித்த ‘அபூர்வா’ என்ற படத்தை 17 வயதில் இயக்கியவர் நிதின் ராமகிருஷ்ணா. இந்த படத்தின் தொடக்க விழா, விரைவில் சென்னையில் நடைபெறுகிறது.

Comments

Most Recent