Entertainment
›
Cine News
›
Police seeks Singamuthu's custody | சிங்கமுத்துவை 3 நாள் காவலில் கோரி மனு
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சிங்கமுத்துவை 3 நாள் போலீஸ் காவலில் அனுமதிக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ...
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சிங்கமுத்துவை 3 நாள் போலீஸ் காவலில் அனுமதிக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், வழக்குகளை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக நடிகர் சிங்கமுத்து மிரட்டினார் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சிங்கமுத்துவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சிங்கமுத்து சைதாப்பேட்டை பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டுக்கு வருகிறது.
இதற்கிடையே சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நேற்று மாஜிஸ்திரேட்டு திருமகள் முன் அரசு தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்த வேண்டிய உள்ளதால் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையும் இன்றே நடைபெறும் எனத் தெரிகிறது.

Comments
Post a Comment