Raavanan - Story Line

http://cinema.dinakaran.com/images/movie/raavan-new-stills/raavan-new-stills-11.jpg
மணிரத்னத்தின் படங்களே பெரும்பாலும் மௌனமாகத் தான் பேசிக்கொள்ளும் என்ற நிலையில் தன் படங்கள் பற்றி மணிரத்னம் எப்போதுமே பெரிதாகப் பேசுவதில்லை. இருந்தாலும் இப்போது இரு மொழிகளில் அவர் இயக்கி முடித்திருக்கும் ‘ராவணா’ படம் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நாடு முழுக்கவே பற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக
நடத்திய வேட்டையில் திரட்டிய தகவல்கள் இவை.

இந்தியில் ‘ராவண்’ என்று தலைப்பிடப்பட்ட படத்தின் ஆடியோ மும்பையில் கோலாகலமாக வெளியாகிவிட்டது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மெலடியில் உள்ளத்தை மயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், இதில் அதையும் தாண்டியிருக்கிறார் .

படத்தின் லைன் இதுதான்...

போலீஸால் தேடப்படும் குற்றவாளிதான் ஹீரோ. அவரை வேட்டையாடும்போது தவறுதலாக அவரது தங்கை கொல்லப்பட, தன் தங்கையைக் கொன்ற போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க நினைக்கும் ஹீரோ, அந்தப் போலீஸ் அதிகாரியின் மனைவியைக் கவர்ந்து வந்துவிடுகிறார். காடு, மேடெல்லாம் வீரப்பன் டைப்பில் அந்தப்பெண்ணோடு ஹீரோ சுற்றித் திரிவதும் போலீஸின் தேடுதல் வேட்டையும் படம் நெடுக. கடைசியில் கணவனிடம் வந்து சேர்கிறார் ஹீரோயின். இத்தனை நாட்கள் ஹீரோவுடன் இருந்ததால், அவளது ஒழுக்கநிலை குறித்து போலீஸ் அதிகாரி சந்தேகம் கொள்ள... என்ன ஆகிறதென்பது கிளைமாக்ஸாம். முன்பு ‘தளபதி’யில் மகாபாரத குந்திதேவி & கர்ணன் எபிசோடை
அடியொற்றிக் கதையை அமைத்திருந்த மணிரத்னம், இந்தப் படத்தில் ராமாயணத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் ஹீரோவாக, அதாவது வில்லனைப் போன்ற ஆன்ட்டி ஹீரோவாக விக்ரம் நடிக்க, போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜும், அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கிறார்கள். விக்ரமின் தங்கையாக பிரியாமணி நடிக்க, அபிஷேக் பச்சன் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இதேபோல் இந்தியில் விக்ரம் நடிக்கும் வேடத்தில் அபிஷேக் பச்சனும்,
போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரமும் அவர் மனைவியாக ஐஸும் நடித்திருக்கிறார்கள். தமிழிலும், இந்தியிலுமாக விக்ரமிடமும், அபிஷேக்கிடமும் மாட்டிக்கொண்டு அல்லல்படும் பொதுவான வேடத்தில் ஐஸ்வருகிறார்.

அபிஷேக்கின் தங்கை வேடத்தில் இந்தியில் மனீஷா நடிக்க, தமிழில் பிரபு ஏற்றிருக்கும் கேரக்டரில் இந்தியில் கோவிந்தா நடித்திருக்கிறார். இவற்றைத்தாண்டி தமிழில் விக்ரமின் மனைவி வேடத்தில் ரஞ்சிதா நடித்திருக்கிறார். இடையில் படத்தைவிடவும் ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா பப்ளிசிட்டியைத் தேடித்தந்துவிட அந்த எபிசோட் படத்துக்கு நெருடலாக இருந்தால் அதைத் தூக்கிவிடலாமா என்றுகூட மணிரத்னம் யோசித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்.

தமிழ் தொட்டு தெலுங்குப்படத்தில் தன் டப்பிங்கையும் தானே விக்ரம் பேசி முடித்திருக்கிறார். இந்தியில் அவருக்காக மாதவனை விட்டுடப் செய்து வைத்திருந்த மணிரத்னம்,
விக்ரம் தெலுங்கில் பேசிய இன்வால்வ்மென்ட்டைப் பார்த்து அவரையே இந்தியிலும் பேச முயற்சிக்கச்சொல்ல, விக்ரம் பேசியதே ஓகே ஆகியிருக்கிறது. அதேபோல் ஐஸ் தானே
ஆசைப்பட்டுத் தமிழில் பேசியதும் ஒரு முக்கிய நிகழ்வு.

பெரும்பாலும் காடுகளில் படப்பிடிப்பு நடந்ததால் அதில் ஒரு காட்சிக்காக ஓநாய்கள் தேவைப்பட, அவற்றை சகல பந்தோபஸ்துகளோடு யு.எஸ்.ஸிலிருந்து தனி விமா
னத்தில் வரவழைத்துப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் மணி. அந்தக் காட்சிகளோடு, சாலக்குடி அருவியிலிருந்து ஐஸ்வர்யா ராய் குதிக்கும் காட்சியும், வடமாநிலத்தில்
எடுக்கப்பட்ட நிஜ ஐஸ் மழைக் காட்சியும் ஹைலைட்கள்.

‘தளபதி’ , ‘இருவர் ’,‘உயிரே’வுக்குப் பிறகு மணிரத்னத்துடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இந்தப்படத்தில் இணைகிறார். அவருக்கு முன் இதில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் மணிகண்டனுடன் கருத்து வேறுபாடு வந்ததில் சந்தோஷ் சிவனை உள்ளே கொண்டு வந்த மணிரத்னம், முன்பு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்த எந்தக்காட்சியையும் படத்தில் பயன்படுத்தவில்லையாம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படும் ‘ராவணா’, கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவிருக்கிறது.
மும்பை ஆடியோ வெளியீட்டு விழாவில் அபிஷேக் ஆடிய லைவ் டான்ஸைப் பார்த்து பல பேர் மகிழ்ந்தனர்.

ஏதோ எப்படியோ... 'ராவணன்' சூடுபிடிக்க தொடங்கியுள்ளது!

Comments

Most Recent