ரொம்ப நாளைக்கு முன்பு பீல்ட் அவுட் ஆன நடிகை ரதி இப்போது டிவி நடிகையாகி விட்டார். பெங்களூரைச் சேர்ந்தவர் ரதி. தமிழ் சினிமா மூலம் நடிகைய...
ரொம்ப நாளைக்கு முன்பு பீல்ட் அவுட் ஆன நடிகை ரதி இப்போது டிவி நடிகையாகி விட்டார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் ரதி. தமிழ் சினிமா மூலம் நடிகையானவர். சொல்ல மறந்த கதை - இவர் நடித்த சில தமிழ்ப் படங்களில் நல்ல நடிகையாக அடையாளம் காட்டிய படம். இதுதவிர கும்மாளம், அடிதடி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரதி பின்னர் காணாமல் போனார்.
தமிழிலும் நடிக்கவில்லை, கன்னடத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கே போனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. மீண்டும் அவர் படிக்கப் போய்விட்டார் என்று கூட கூறினார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கத் திரும்பியுள்ளார் ரதி. ஆனால் சினிமாவில் அல்ல - டிவி சீரியலில்.
கன்னடத்தில் வெளியாகும் தங்கம் என்ற மெகா தொடரில் நடிக்கிறார் ரதி. இது உதயா டிவியில் ஒளிபரப்பாகிறது. இது தமிழில் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் ரீமேக்தான். இந்த தொடரில்தான் தற்போது ரதி நாயகியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் நடித்து வரும் ரதி தமிழ் சீரியல்களுக்கும் வருவாரா என்பது தெரியவில்லை.
Comments
Post a Comment