விஜய் படம் அதுவும் அவரது 50வது படம் ஒரு வாரத்தை கடப்பதற்குள் சன் பிக்சர்ஸிடமிருந்து அடுத்தப் படத்துக்கான விளம்பரம். இந்த அதிரடியை எதிர்பார்...
விஜய் படம் அதுவும் அவரது 50வது படம் ஒரு வாரத்தை கடப்பதற்குள் சன் பிக்சர்ஸிடமிருந்து அடுத்தப் படத்துக்கான விளம்பரம். இந்த அதிரடியை எதிர்பார்க்காத தளபதி குரூப் ஆடிப்போயிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் சூர்யாவின் சிங்கம், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, தனுஷின் ஆடுகளம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறது. இதில் சிங்கம் படத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில்தான் பிரச்சனையே.
சுறா ஓடும் திரையரங்குகள்தான் சிங்கத்துக்காக ஒதுக்கப்பட உள்ளது. ஐம்பது நாளை தொடுவதற்குள் இப்படியொரு முடிவை சன் பிக்சர்ஸ் எடுக்க விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்தான் காரணம் என்கிறார்கள். கலெக்சன் இல்லாத சுறாவை தொடர்ந்து ஓட்ட முடியாது என்று அவர்கள் சன் பிக்சர்ஸிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்கள்.
இம்மாதம் 28 ஆம் தேதி சிங்கத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் அதற்கு முன்பே சிங்கம் கர்ஜிக்கும் போலிருக்கிறது.
Comments
Post a Comment