Tele Chipsபிரபல டி.வி.​ ஷோவான 'ஓப்பி வின்ஃபரே' ஷோவுக்காக நீண்ட இடைவெளிக்குப் பின் ஜோடி சேர்ந்திருக்கிறது அபிஷேக் -​ ஐஸ் ஜோடி.​ திருமணத்துக்குப் பின் ஒரிரு ஷோக்களில் வந்த இந்த ஜோடி இந்நிகழ்ச்சிக்காக நீண்ட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது.​ இதில் பள்ளி வாழ்க்கை முதல் 'ராவணன்' படம் வரை முழு வாழ்க்கையையும் மனம் திறக்கிக்கிறார்களாம்.​ பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவும் ஜூம் டி.வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தனது இசைப்பள்ளி மூலம் சென்னை பள்ளி மாணவர்களுக்கு இசை பயிற்சி அளித்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.​ சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இசை ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களின் பட்டியலை கேட்டுள்ளாராம்.​ இசைப் பள்ளியின் கிளைகளைத் தமிழகம் முழுமைக்கும் எடுத்துச் செல்லும் திட்டமும் இருக்கிறதாம் இசைப் புயலுக்கு.

விஜய் ஆண்டனியின் இசையில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணையப் போகிறார்கள்.​ லயோலாவின் புகழ் பாடும் இந்த ஆல்பத்துக்காக முன்னாள் மாணவர்களான விக்ரம்,​​ விஜய்,​​ சூர்யா நடித்து தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.​ த்ரிஷா உள்ளிட்ட இன்னப் பிற முன்னாள் மாணவர்களிடமும் பேச்சு நடக்கிறதாம்.​ 'நான்' படம் மூலம் விஜய் ஆண்டனி ஹீரோவாக உள்ள நிலையில் ஆல்பத்துக்கான இசையமைப்பிலும் இறங்கி விட்டாராம்.

திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான மாதுரி தீட்சித்துக்கு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்ததே கடைசி பாலிவுட் படம்.​ சினிமாவுக்கு முழுக்குப் போட்டு குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த தீட்சித்,​​ தற்போதுதான் 42-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.​ பார்ட்டியில் கலந்து கொண்ட சிம்ரன் ''தான் ஹிந்தியில் தயாரிக்கப் போகும் சீரியலுக்கு நீங்கள்தான் ஹீரோயின்'' என வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

ப்ரீத்தி ஜிந்தா,​​ ஷில்பா ஷெட்டி,​​ கத்ரீனா கைப்,​​ பிபாஷா பாசு,​​ தீபிகா படுகோன் உள்ளிட்ட இன்னும் பிற பாலிவுட் நாயகிகள் ஐ.பி.எல்.​ விருது வழங்கும் நிகழ்ச்சியை அலங்கரிக்க,​​ சமீரா ரெட்டியின் கிளாமர்தான் விழாவில் டாப்.​ இந்த பப்ளிசிட்டியால் வரும் ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு அணிக்கு சமீரா பங்குதாரராக ஆகி விட வாய்ப்பிருக்கிறதாம்.சத்தமில்லாமல் 'ஸ்ட்ரைக்கர்' என்ற ஹிந்திப் படத்தை முடித்து விட்டார் பத்மபிரியா.​ இதில் கேரம் பிளேயராக சித்தார்த் நடிக்க,​​ சாராயம் விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறாராம் பத்மபிரியா.​ ஸ்ட்ரைக்கருக்காக பத்மாவுக்கு விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.​ இதையடுத்து மூன்று பாலிவுட் படங்கள் கையில் இருக்கிறதாம்.

ஐ.பி.எல்.​ கிரிக்கெட் போட்டியால் இந்த முறை அதிகமாக பாதிக்கப்பட்டது பாலிவுட் தயாரிப்பாளர்கள்தானாம்.​ ஒரு மாதத்துக்கும் மேலாக பெரிய பட்ஜெட் படங்கள் முடங்கிய நிலையில்,​​ சிறு பட்ஜெட் படங்களின் நிலை அதற்கும் மேலாம்.​ ​ இந்த நிலையில்,​​ நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும்,​​ ராக்கி சாவந்த் போன்ற கிளாமர் நடிகைகளின் நடனங்களும்தான் இந்த ஒரு மாதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.டிஸ்னி சேனலின் பிரபலமான 'கியா மஸ்திகே ஃலைப்' புதிய மாயாஜாலக் காட்சிகளுடன் புதுப் பொலிவு பெறுகிறது.​ கோடைகால விடுமுறைக்காக புதிய தந்திரக் காட்சிகளுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீசன் -2 ஆக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகப் போகிறது.​ இந்தத் தொடரை புத்தக வடிவில் வெளியிடவும் நிகழ்ச்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

ஹேர் ஆயில் ஒன்றுக்கு தென்னகத்து விளம்பரத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை சினேகா.​ 'மாடலிங் பெண்களில் இயற்கை அழகு உடையவராக சினேகா இருக்க அவரையே விளம்பரத்தூதராக நியமித்து விட்டோம்' என ஆயில் நிறுவனம் காரணம் சொல்ல,​​ 'இயற்கை மிகுந்த அழகைத்தரும் ஹேர் ஆயிலுக்கு விளம்பரத்தூதராக இருப்பதில் பெருமையாக இருக்கிறது' என விளக்கம் அளித்திருக்கிறார் சினேகா.

Comments

Most Recent