Trisha to do Jessie in Hindi Remake of Vinnaithaandi Varuvaaya

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் த்ரிஷா 
http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1075.jpg
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதிலும் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம், தமிழ், தெலுங்கில் வெளியானது. தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதுபற்றி கவுதம் மேனன் கூறும்போது, ‘’இந்தியில் ரீமேக் ஆவது உண்மைதான். நானே இயக்குகிறேன். பிரதீக் பப்பர் ஹீரோவாக நடிப்பார். த்ரிஷா ஹீரோயின். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தக் கதை எந்த மொழிக்கும் சரியாக இருக்கும். அதனால், இந்திக்கென்று எந்த மாற்றமும் செய்யவில்லை” என்றார்.

Comments

Most Recent