Whats on Television Channels




சரண்யா மோகன்
தற்போது விளம்பரங்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது சரண்யா மோகனை. ''தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான்.​ ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன்.​ தமிழில் கிராமத்துப் படங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள்.​ தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய ஆர்வமில்லை.​ அதனால்தான் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறேன்'' என்கிறார் சரண்யா மோகன்.

மெட்ராஸ் டாக்கீஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ராவணன்' படத்துக்கான விளம்பரங்கள் தற்போது இந்தியா முழுவதும் 27 சேனல்களில் உலா வருகிறதாம்.​ தமிழ்,​​ தெலுங்கு,​​ ஹிந்தி என ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷனுக்காக இந்தியாவின் சில முக்கிய நகரங்களை விக்ரம்,​​ அபிஷேக்,​​ ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட படக்குழுவினர் சுற்றி வரவும் முடிவெடுத்து உள்ளார்களாம்.​ மணிரத்னமும் இந்தக் குழுவில் உண்டாம்.

செங்குத்தான மலைகளையும்,​​ ஆழமான பள்ளத்தாக்குகளையும்,​​ உயர்ந்த பீடபூமிகளையும் கொண்டது போர்னியோ தீவு.​ எளிதில் நுழைய முடியாத நிலபரப்பு,​​ ஆராயப்படாத பிரசேதம்,​​ சில பழங்குடியின மக்களின் வாழ்க்கை,​​ அபூர்வ விலங்குகள் என திக் திக் நிமிடங்களில் பயணிக்கிறது டிஸ்கவரியின் 'எக்ஸ்பிடிஷன் போர்னியோ' நிகழ்ச்சி.​ ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

காதல் சச்சரவுகள்,​​ திருமண வதந்திகள் என மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருந்த நயன்தாரா சமீபகாலமாக மீடியாவின் பார்வையில் தென்படுகிறார்.​ இதற்கு திருமணத்தைப் பற்றிய வதந்திகள் முடிவுக்கு வந்து விட்டதுதான் காரணமாம்.​ பல பிரச்னைகளால் முகத்தின் பழைய பொலிவு போய் விட்டது என நண்பர்கள் அட்வைஸ் செய்ய கேரளத்தின் மூலிகை மருத்துவத்தின் மூலம் முக அழகைக் கூட்டவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

கோடைக் கால சிறப்புத் திரைப்படங்களில் 'ஹேண்ட் ஆப் டெத்',​ 'ஹியர்லஸ் ஹைனா',​ 'டிராகன் லார்ட்' உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில சினிமாக்களை வரும் நாள்களில் ஒளிபரப்ப போகிறது விஜய் டி.வி.​ ​ மே மாதம் முழுவதும் ஒளிபரப்பாகிற இந்த திரைப்படத் திருவிழாவில் ஜாக்கிசான் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்குமாம்.​ சில ஹிட்டடித்த பழைய ஹிந்தி படங்களையும் கையில் வைத்திருக்கிறதாம் விஜய் டி.வி.​ நிர்வாகம்.​ ​

தி.மு.க.​ பிரமுகராகிவிட்ட குஷ்பூவின் 'ஜாக்பாட்' மற்றும் 'கல்கி' தொடரை நிறுத்தி விட்டது ஜெயா டி.வி.​ நிர்வாகம்.​ இந்த மாதம் நடக்கவிருந்த ஜாக்பாட்டின் 400-வது வார பிரம்மாண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களை ரத்து செய்திருக்கிறது.​ குஷ்பூவுக்கு பதிலாக மற்றொமொரு நடிகையை களம் இறக்க பேச்சு வார்த்தையிலும் இறங்கியிருக்கிறது.​ நடிகை தேர்வில் தற்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகைக்குதான் வாய்ப்பு இருக்குமாம்.​ ​

முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் நடிகர் வசந்த்தின் நினைவு தினத்தையொட்டி கடந்த 14-ம் தேதி அனைத்து சீரியல் ஷூட்டிங்குகளையும் நிறுத்தி அஞ்சலி செலுத்தியது சின்னத்திரை கூட்டமைப்பு.​ இதையடுத்து விரைவில் உருவாக்கப்பட இருக்கும் திரைப்பட நகரில் அவரின் குடும்பத்துக்கு ஒரு வீடு ஒதுக்கி,​​ அதற்கான செலவுகளையும் சின்னத்திரை நடிகர்களே ஏற்கவும் உள்ளார்களாம்.

ஏழு கண்டங்களைப் பற்றி விரிவான பார்வையை வழங்கி வருகிறது அனிமல் பிளானட் சேனலின் 'ஓசோன்ஸ்' நிகழ்ச்சி.​ கண்டங்களின் பருவ நிலை மாறுபாடுகள்,​​ விலங்குகள்,​​ தாவர வகைகள்,​​ மனிதர்களின் இயல்பான வாழ்க்கையின் மாறுபாடுகள் என அனைத்தையும் படம் பிடித்து காட்டுகிறது.​ அட்லாண்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான அனைத்து கண்டங்களையும் வியாழக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு படம் பிடிக்கிறது இந்த நிகழ்ச்சி.

சிம்ரன் தயாரிக்க இருக்கும் முதல் தமிழ் சீரியலில் நடிக்க இருப்பது நடிகை கஸ்தூரிதானாம்.​ சீரியல் தயாரிப்புக்கான நடிகைகள் பட்டியலில் கஸ்தூரியை சிலர் சிபாரிசு செய்ய அவரையையே டிக் அடித்திருக்கிறாராம் சிம்ரன்.​ முட்டுக்காடு பகுதியில் பிரமாண்ட பங்களா இறுதிக் கட்ட பணிகளை அடைந்திருக்கிறது.​ இதற்கு பின் இந்த சீரியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகிறதாம்.​ இதற்காக சில சேனல்களிடம் நேரம் வாங்கும் பணியும் தொடங்கி விட்டது.

Comments

Most Recent