ஜூன் மாதம் கோவையில் நடக்கும் உலக சொம்மொழி தமிழ் மாநாட்டு பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகும...
ஜூன் மாதம் கோவையில் நடக்கும் உலக சொம்மொழி தமிழ் மாநாட்டு பாடல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் தனக்கே உரிய ஸ்டைலில் உருவாக்கி வருகிறார். இந்த பாடலை முன்னணி பாடகர்கள் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரிஹரன், நித்யஸ்ரீ, சின்மயி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ரெகானா ஆகியோர் பாட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைந்து யுவன் சங்கர்ராஜாவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட உள்ளார் என்பது கூடுதல் செய்தி. நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை சகாப்தம் என்று அழைக்கப்படும் பழம்பெரும் பாடகர் டி.எம்.செளந்திரராஜனும் செம்மொழி மாநாட்டு பாடலை பாட சம்மதம் தெரிவித்துள்ளார். மாநாட்டு பாடல் கம்போசிங் தொடர்பாக கனிமொழி எம்.பி., ரகுமானுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Comments
Post a Comment