Entertainment
›
Cine News
›
4 Vikram fans arrested for demanding money from VCD shop owner | ராவணன் விசிடி-பணம் கேட்டு மிரட்டிய விக்ரம் ரசிகர்கள்
4 Vikram fans arrested for demanding money from VCD shop owner | ராவணன் விசிடி-பணம் கேட்டு மிரட்டிய விக்ரம் ரசிகர்கள்
ராவணன் பட திருட்டு விசிடி விற்பனை குறித்து போலீஸுக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி வீடியோ கடை உரிமையாளரை மிரட்டிய நா...
ராவணன் பட திருட்டு விசிடி விற்பனை குறித்து போலீஸுக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி வீடியோ கடை உரிமையாளரை மிரட்டிய நான்கு விக்ரம் ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தில் வீடியோ கடை வைத்து நடத்தி வருபவர் சதிஷ்குமார். இவரது கடைக்கு ராயப்பேட்டையை சேர்ந்த சிராஜுதீன், சீனிவாசன், அமீர், கார்த்திக் ஆகிய 4 விக்ரம் ரசிகர்கள் சென்றனர்.
ராவணன் திருட்டு சி.டி.க்கள் இருக்கிறதா என கேட்ட 4 பேரும் 24 சி.டி.க்களை விலைக்கு வாங்கினர். பின்னர் கடை அருகே தாங்கள் சென்ற காரை நிறுத்தி விட்டு கடை உரிமையாளர் சதீஷ்குமாரை அழைத்தனர்.
விக்ரம் ரசிகர்களாகிய நாங்கள் கூறினால் போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்தால் புகார் கொடுக்காமல் சென்று விடுவோம். இல்லையென்றால் நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சதீஷ்குமார் நீலாங்கரை போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் முரளி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விக்ரம் ரசிகர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் சதீஷ்குமார், ஊழியர் பழனிவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment