Entertainment
›
Cine News
›
Actress manorama interview | பைத்தியம்னு வதந்தி பரப்புறாங்களே...! மனோரமா கண்ணீர்!
கடுமையான கால்வலியால் அவதிப்படும் என்னை பைத்தியம் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று நடிகை மனோரமா கண்ணீருடன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகின...
கடுமையான கால்வலியால் அவதிப்படும் என்னை பைத்தியம் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று நடிகை மனோரமா கண்ணீருடன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகினரால் ஆச்சி என செல்லமாக அழைப்படும் மனோரமா இதுவரை 1,300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் சென்னையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இருப்பினும் அவரது கால்கள் தொடர்ந்து வீக்கத்திலேயே இருக்கின்றன.
இதற்கிடையில்தான் மனோரமா திருப்பதி கோயிலுக்கு முடிக்காணிக்கை செலுத்த சென்றார். அங்கு விஐபி தரிசனம் கேட்டு அடம் பிடித்ததாக முதலில் செய்தி வெளியானது. பின்னர் அங்கிருந்து திரும்பியபோது விபத்தில் சிக்கியதாகவும் செய்தி வெளியானது. இப்போது மனோரமா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசியத் துவங்கியுள்ளன. இதனால் மனம் வேதனையடைந்த மனோரமா அளித்துள்ள பேட்டி வருமாறு:
மூட்டு ஆபரேஷன் செய்து கொண்டபின், வலி கொஞ்சம் குறைந்து இருந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா சென்று, 4 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். திரும்பி வந்ததும், புதுக்கோட்டையில் ஒரு திருமணத்துக்கு போய் வந்தேன். பின்னர், தஞ்சையில் உள்ள நவக்கிரகங்கள் கோவில்களுக்கு போய்வந்தேன். அதன்பிறகு முழுமையாக வலி தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு `ஆறுபடை' முருகன் கோவில்களுக்கு புறப்பட்டேன். ஆறு ஊர்களுக்கும் போய் முருகனை வணங்கிவிட்டு, என் தாயாரின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, திருப்பதிக்கு போனேன். அங்கு தலைமுடி காணிக்கை செலுத்த என்னிடம் ரூ.6 ஆயிரம் கேட்டார்கள். தலைமுடி காணிக்கைக்கு ஆறு ஆயிரமா? என்று கொஞ்சம் கோபப்பட்டு கேட்டு விட்டேன். முக்கிய பிரமுகர்கள் முடி காணிக்கை செலுத்த ரூ.6 ஆயிரம் வசூலிக்கிறோம் என்றார்கள். அதனால் தர்மத்துக்கு தலைமுடி எடுப்பவர்களிடம் போனேன். அங்கு மூன்று பெண்கள் எனக்கு உதவினார்கள். தலைமுடியை எடுத்தபின், என்னை குளிப்பாட்டி புதிய உடை அணிவித்தார்கள்.
தொடர்ந்து நீண்ட நேரம் பயணம் செய்ததால், மீண்டும் என் கால்களில் அதிக வலி ஏற்பட்டது. சாமி தரிசனத்துக்காக நின்றபோது, வலியை தாங்க முடியாமல் அழுதேன். இதையெல்லாம் வைத்து, எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது என்றும், பைத்தியம் என்றும் வதந்தி பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். முழங்கால் வலிதான் தொடர்ந்து இருந்து வருகிறது. நீண்டநேரம் கால்களை தொங்கவிட்டால், வலி அதிகமாகிறது. கால் பாதங்கள் வீங்கி விடுகின்றன. மற்றவர்களிடம் நான் கோபப்படுவதற்கு இதுதான் காரணம். எனக்கு பைத்தியம் என்று வதந்தியை பரப்பி, என் மனதை புண்படுத்த வேண்டாம்.
இவ்வாறு கூறியிருக்கும் மனோரமா தற்போது `பொன்னர் சங்கர்' படத்திலும் பாண்டவர்கள் என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். மோகன்பாபு மகன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். என் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் மனோரமா.
Comments
Post a Comment