புது ஹீரோ பளார் ஹீரோயின் கன்னம் வீங்கியது

Cine News
எய்ட் பாயின்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அருமைச்சந்திரன் தயாரிக்கும் படம், ‘வாடா போடா நண்பர்கள்’. மணிகை இயக்குகிறார். ‘புகைப்படம்’ சி.வி.நந்தா, ‘இனிது இனிது’ ஷரன் ஹீரோக்கள். ஹீரோயினாக அறிமுகமாகும் யஷிகா கூறியதாவது: சிந்து என்ற பெயரை, சினிமாவுக்காக யஷிகா என்று மாற்றினேன். பெங்களூர் கல்லூரியில், எம்.எஸ்.சி இறுதியாண்டு படிக்கிறேன். ‘பரிச்சயா’ கன்னட படத்தில் ஹீரோயின் ஆனேன். தெலுங்கில் ‘அல்லம் வெல்லுள்ளி’யை முடித்த பின், தமிழில் இந்த படத்தில் நடிக்கிறேன்.

இதன், கிளைமாக்ஸ் காட்சி சென்னை வளசரவாக்கத்தில் படமானது. வெளியே செல்லும் நந்தாவை, தடுத்து நிறுத்துவது போன்ற காட்சியை இயக்குனர் படமாக்கினார். அப்போது நந்தா ஆவேசத்துடன் என் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். நடிப்புக்காக, சும்மா அடிப்பார் என்று பார்த்தால், நிஜமாகவே அறைந்து விட்டார். இதில் என் கன்னம் வீங்கிவிட்டது. இதையடுத்து ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிவிட்டேன். பிறகு இயக்குனரும், நந்தாவும் சமாதானம் செய்த பின் நடித்தேன்.

Comments

Most Recent