பாஸ்போர்ட் மாயம் : பாரிசில் ஹன்சிகா தவிப்பு!

Hanishka
பாஸ்போர்ட் மாயமானதால் பாரிசில் தவித்த ஹன்சிகா விமானத்தை தவறவிட்டார். பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம் ‘இச்’. இதன் படப்பிடிப்பு பாரிசில் நடந்துவருகிறது. இதற்காக படக்குழுவினர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். ஷூட்டிங் இடைவேளையில், பாரிசிலிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார் ஹன்சிகா. இதற்காக, விமான டிக்கெட்டையும் புக் பண்ணியிருந்தார். அறையிலிருந்து ஏர்போர்ட்டுக்கு கிளம்பும் நேரத்தில்தான், பாஸ்போர்ட் மாயமாகியிருந்தது தெரிந்தது. இதனால் ஷாக் ஆன ஹன்சிகா, ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் கண்ணீர் விட்டார். இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறையில் வேறொரு பேக்கில் பாஸ்போர்ட் இருந்ததை கண்டுபிடித்து கொடுத்தனர். இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால், 4 மணி நேரம் தேடுவதில் கழிந்ததால் விமானத்தை தவறவிட்டார்.

Comments

Most Recent