அமீர்கானை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த லஜ்ஜா படத்தை மணிரத்னம் அடுத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு காதல் கதை. வழ...
அமீர்கானை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த லஜ்ஜா படத்தை மணிரத்னம் அடுத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு காதல் கதை. வழக்கம் போல் ரஹ்மான் இசை. இந்தப் படததுக்கான இசை வேலைகளை தொடங்கிய பிறகு சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. மணிரத்னம் ராவணன் படத்தை இயக்கினார்.
தற்போது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியிருப்பதாக கூறுகிறார்கள். லஜ்ஜாவில் கரீனா கபூர் நடிப்பதாக இருந்தது. இலங்கையில் நடந்த திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டதால் ஐந்து மாநிலங்களில் அவர் நடித்தப் படத்துக்கு தடை விதித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக மணிரத்னம் கரீனா கபூருக்குப் பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என்கிறார்கள். எனினும் படம் குறித்த உறுதியான தகவல் ராவணன் ரிலீஸுக்குப் பிறகே தெரியவரும்.
Comments
Post a Comment