புது உறவை சொல்லும் ஆயிரம் விளக்கு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1321.jpg 
புது உறவினை சொல்லும் படமாக 'ஆயிரம் விளக்கு' உருவாகியுள்ளது என்றார் இயக்குனர் ஹோசிமின். அவர் கூறியதாவது: 'ஆயிரம் விளக்கு' ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒரு குத்துப் பாட்டு மட்டுமே பாக்கி. சத்யராஜ், சாந்தனு, சனா கான், சுமன், சுஜா, கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சத்யராஜுக்கு ஜோடி இல்லை. மதுரையை கதைக் களமாக கொண்ட படம். ஆனால் வழக்கமான மதுரை படமாக இருக்காது. 55 வயதுள்ள ஒருவருக்கும் 25 வயது இளைஞனுக்கான உறவுதான் கதை. இந்த உறவே தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். மனதை நெக¤ழ வைக்கும் கதையை ஆக்ஷன் பின்னணியுடன் சொல்லியுள்ளேன். 85 நாட்களில் இதன் ஷூட்டிங் முடிந்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா இருக்கும். ஆகஸ்ட்டில் படம் ரிலீசாகும். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இவ்வாறு ஹோசிமின் கூறினார்.

Comments

Most Recent