தமிழுக்கு வருகிறார் மினிஷா லம்பா

http://www.hindustantimes.com/images/HTEditImages/Images/manisha-koirala2.jpg 
இந்தி நடிகை மினிஷா லம்பா தமிழில் நடிக்க வருகிறார். 'யாஹன்', 'பச்னா ஏ ஹசீனோ', 'கார்பரேட்' உட்பட பல இந்தி படங்களில் நடித்தவர்  மினிஷா லம்பா. அவர் கூறியதாவது: எனது பள்ளிப் பருவத்தை சென்னையில்தான் கழித்தேன். இங்குள்ள ஷெர்வுட் ஹால், செட்டிநாடு வித்யாசிரம் பள்ளிகளில் படித்தேன். சென்னையில் பல இடங்களில் தோழிகளோடு சுற்றித் திரிந்திருக்கிறேன். தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளிவருகிறது. திறமையான இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள். விக்ரமின் நடிப்புக்கு நான் அடிமை. அதே போல சூர்யா, தனுஷ், அஜீத்தின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். இந்திப் படங்களில், நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறேன். இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இன்னும் பேச்சு வார்த்தையில் இருப்பதால் இப்போது அந்த படங்கள் பற்றிய விவரங்களை சொல்ல இயலாது. நான் தமிழ் நடிகர் ஒருவரை காதலிப்பதாக சொல்வதில் உண்மையில்லை. என் நடிப்பை மட்டுமே காதலித்து வருகிறேன். இவ்வாறு மினிஷா லம்பா கூறினார்.

Comments

Most Recent