Happy birthday Ilayathalapathy! விஜய் 37வது பிறந்த நாள்: ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி!

Today is the birthday of Ilayathalapathy Vijay, the darling of the young and the old. One wave of his hand is enough to send the public into a cheering and screaming frenzy.
After successfully making an impression as a mass hero, Vijay has now instilled confidence in audiences' minds that he will also be a good leader. Today, the launch of his political party is discussed along with news about his next release Kavalkaran.

Vijay's Birthday Celebration Pictures | Photos | Images


It has been 18 years since Vijay entered the movie world with Naalaiya Theerpu. His earlier movies were based on romance and friendship. Slowly, he moved toward more mass films, which had liberal doses of action and comedy along with his dances. This kind of movies made him the favourite of young and old.
With a view to use his widespread popularity for the greater good, Vijay converted all his fan clubs into service organisations. Today, it is said that there are 60,000 fan clubs functioning exclusively for Vijay. Fan frenzies range from pouring milk and honey on his cutouts to organizing health camps and offering donations. Last year, he released a flag for his fan clubs. This year, talks about his forthcoming political party are circulating.
Vijay has a series of remakes coming up later this year. He is currently busy with Kaavalkaran (remake of Malayalam hit Bodyguard), which also marks the re-entry of Southern beauty Asin to Kollywood after a gap. After that, Vijay will team up with Jayam Raja for Velayudham (remake of Telugu hit Azad), with Genelia and Hansika as his heroines. Vijay will also star in the Tamil remake of the Bollywood blockbuster 3 Idiots.
So Vijay, will you enter politics? The whole industry and audiences are looking forward to your response and official statements. Happy birthday Vijay!
 

Vijay_430
இன்று இளைய தளபதி விஜயின் 37 ஆவது பிறந்த தினம். அவருடைய பல லட்சம் ரசிகர்களில் ஒருவனாக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 1974 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி பிறந்த இவர், 1992ஆம் ஆண்டில் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதுவரை 50 படங்களை நடித்துள்ள இவரது அடுத்த படம் “காவல்காரன்.

“பூவே உனக்காக பார்த்த போது என்னையறியாமல், எனக்குப் பிடித்த நடிகராக மாறிவிட்டார். விஜயின் படங்களில் மிகவும் பிடித்தது ‘துள்ளாத மனமும் துள்ளும். அதிக தடவை பார்த்த படம் “கில்லி. பிரபலமானவரை பற்றி பலருக்கும் தெரியும்.

விஜயின் வாழ்க்கை கில்லி பட திரைக்கதை போல அத்தனை வேகமானதாகத்தான் பலராலும் சொல்லப்படுகிறது. முதல் பத்தியில் சொன்னதைப் போல அது இலகுவானதா என்றால் நிச்சயம் இல்லை. விஜய் முதலில் நடிக்க வேண்டும் என்ற போது அவர் வீட்டிலே எதிர்ப்புதான் பதிலாய் வந்தது. தன் நண்பர்களிடத்தில் சொல்லியிருந்தாலும் கிண்டலும் கேலியும்தான் செய்திருப்பார்கள். அப்போது இருந்த விஜயின் தோற்றம் அப்படி. மட்டுமில்லாமல் சினிமாவில் நுழைவதற்கான ட்ரேட் மார்க் தகுதிகளாக வாரிசுகள் உருவாக்கி வைத்திருக்கும் குதிரையேற்றம், சண்டை பயிற்சி, நடனம் என எந்த முன்னேற்பாடுகளும் அவர் செய்யவில்லை. சினிமாவில் நுழைய அவர் செய்த அதிகபட்ச முயற்சியே வீட்டில் சொல்லாமல் உதயம் தியேட்டருக்கு சென்று அண்ணாமலை படம் பார்த்ததுதான். அதற்குள் அவரைத் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கே இழுத்து செல்லப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாய் எதுவும் முயற்சி செய்யவில்லையே என்று விஜயை சீண்டும் எஸ்.எம்.எஸ்கள் வரலாம். ஆனால் உண்மை அதுதானா?

விஜயின் முதல் படம் தோல்வி. இரண்டாவது பட படப்பிடிப்பில் ஒருவர் சொன்னாராம் இவனையெல்லாம் யாருய்யா நடிக்க கூப்பிட்டது? சண்டையும் வரல டான்ஸூம் வரல. உண்மைதான். அப்போது விஜய்க்கு அந்த இரண்டுமே சரியாக வரவில்லை. சொல்லப் போனால் அப்போது இருந்த விஜய்க்கு எதுவுமே சரியா வரவில்லை. இன்று விஜயின் ப்ளஸ்களில் முக்கியமானவையாக இருப்பது அவை இரண்டும்தான். எந்த இரண்டு விஷயங்களுக்கு அவர் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படாரோ, அதில்தான் அவர் இன்று இணையற்ற நாயகனாக விளங்குகிறார். மீனா, ரோஜா போன்று அவருடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுக்கிய பலர் அவருடன் ஒரு பாடலில் மட்டும் ஆடியது எல்லாம் பழைய கதை. இந்திய அளவில் சிறந்த டேன்சர் என்று ஷில்பா ஷெட்டியிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன மூவரில் ஒருவர்… விஜய். இதற்கும் அவர் இயக்குனர் மகனாக பிறந்ததுதான் காரணம் என்போர். ப்ளீஸ். இது உங்களுக்கு அல்ல.

விஜயின் 50 படங்களை 5 வகையாக பிரிக்கலாம். தனக்கென ஒரு பாதை இல்லாது நடித்த ஆரம்பகால படங்கள். அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார். அதை விட்டுவிடலாம். அவரது 9வது படம். பூவே உனக்காக இரண்டாம் வகை. குடும்ப செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல், மின்சார கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள். இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்கு போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனது பாதையை சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி. மூன்றாம் வகை. உடைகள், நடனம், பாடி லேங்ஜுவேஜ் என சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என மேட்டுக்குடி படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பான ஓப்பனிங் கண்ட அந்த திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா.

விஜய் பார்க்க சுமார் என்றவர்கள் கூட அவரின் உடையலங்காரம் குறித்து சிலாகித்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். இந்தியாவின் பல முன்னணி காஸ்ட்யும் டிசைனர் தமிழகத்தின் பெஸ்ட் டிரெசிங் சென்ஸ் உடையவர் விஜய்தான் என்றும் சொன்னார்கள். குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி என பட்டயைக் கிளப்பினார். மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாக தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன், வசீகரா, புதிய கீதை என தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்பு பின்னர் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. நாயகியின் தங்கை காலில் விஜய் விழுவது போல இருந்த ஒரு காட்சி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்று எழுதியது ஒரு வாரப்பத்திரிக்கை.

அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் அவதாரமெடுத்து நிற்க, கூடவே நந்தா, மெளனம் பேசியது என பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க என்ற சிக்சரோட காத்திருந்தார். 2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது விஜய்க்கு. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலிஸாக நடித்த ஆஞ்சனேயா, வல்லரசில் விஜய்காந்தையே கலக்கலாக காட்டிய மகாராஜன் படம்  ஒரு பக்கம். தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா. இவர்கள் ஒரு பக்கம்.  தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குனரோட ஒரு பக்கம். தமிழ் சினிமாவின் அன்றைய டாப் ஹீரோக்கள் நேரிடையாக மோதிய களம். திருமலை.. நான்காம் வகை.

படம் வந்தபோது நீங்கள் தமிழகத்தில் எந்த ஊரில் பார்த்திருந்தாலும் நினைவிருக்கும். விஜயின் மாஸ் முன்னால் எதுவும் எடுபடாமல் போனது. பிதாமகன் தேசிய விருது பெற்றாலும் மக்களின் அமோக ஆதரவு திருமலைக்கே. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்கு தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் தளபதி. திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்

“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”

விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.

“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”

சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில் போய்க் கொண்டிருந்தார் தளபதி. இங்க விழுந்து ஆகணுமே என்று எதிர்பார்த்தது போல் ஆனது. குருவி, வில்லு என தனக்கு மெகாஹிட் தந்த இயக்குனர்களை நம்பி தோல்வியைத் தந்தார். வேட்டைக்காரன் சற்றே பிக்கப் ஆனாலும் சுறா வந்து சுத்தமாக சூறையாடியது. இதோ மீண்டும் ஒரு மந்த நிலையில் உள்ளார் தளபதி. மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அடுத்து ஹீரோயிச பில்டப் இல்லாத பாடிகார்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். குடும்ப படங்களுக்கு பெயர் போன ஜெயம் ராஜாவுடன் கைகோர்க்கவிருக்கிறார். 3 இடியட்ஸில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குனர் யார் என்ற யூகப்போர்தான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தனது புதுப்பாதை மூலம் அவர் வெற்றிக்கொடி நாட்டப்போவது நிச்சயம். இந்த தோல்விகள் எல்லாம் விஜய்க்கு புதிதல்ல. படத்தின் முடிவு என்னவென்றாலும் ரசிகர்கள் எண்ணிக்கை அவருக்கு என்றுமே குறைந்ததில்லை. பெரும் வெற்றி எனப்படும் சிங்கத்தின் முதல் மூன்று நாள் சென்னை வசூல் 75 லட்சம். படுதோல்வி எனப்படும் சுறாவின் வசூல் 73 லட்சம். விஜய் டிவி தமிழகமெங்கும் நடத்திய அக்ருத்துக் கணிப்பில் அபார முன்னிலையில் Most Popular hero ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுதான் விஜய்.

இதுவரை அவர் நடித்த genre ல் அவரைப் போல ஹிட் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. கலையம்சம் கொண்ட, நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள படங்களை அவர் இதுவரை செய்யவில்லை. 3 இடியட்ஸ் அதற்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். எந்தவொரு வகை படத்தில் நடித்தாலும் அதில் சில மெகாஹிட் தருவது வழக்கம்.  பூவே உனக்காக தொடங்கி, போக்கிரி வரை விஜயின் படங்கள் பெற்ற மாபெரும் வெற்றியை வேறு எந்த நடிகர் தந்திருக்கிறார்? மீண்டும் வருவார் விஜய்.



நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.
டீக்கடையில் இரவில் வேலை செய்து கொண்டே பகலில் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 1200க்கு 1130 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பாண்டியராஜ் எனும் மாணவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அவரை இன்று நேரில் வரவழைத்தார். அந்த மாணவர் என்ன படிக்க விரும்புகிறார் எனக்கேட்டு அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.
மேலும் விஜய் உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி படித்து தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.
இதே போல தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துள்ள நடிகர் விஜய், அவர்களது கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று படிக்க வைக்கிறார். விஜய்யின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான பிடி செல்வகுமார் இப்பொறுப்பை நேரடியாகக் கவனித்து வருகிறார்.

மாவட்டம்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களையும் விஜய் ரசிகர் மன்றங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் பிறந்த நாளையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்த தானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடந்து வருவதாக விஜய் தெரிவித்தார்.
பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments

Most Recent