Ileana to pair up with Vikram in Vedi | விக்ரமின் வெடி... இலியானா ஜோடி!

http://farm3.static.flickr.com/2065/2341331876_1f26525518.jpg
பெரிய இயக்குநர்களுடன் சேர்ந்து 2 - 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்து வரும் விக்ரம், இப்போது குறுகிய கால தயாரிப்பு ஸ்பெஷலிஸ்டான் பூபதி பாண்டியனுடன் இணைகிறார். படத்தின் பெயர் வெடி.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி இலியானா. கேடி படத்துக்குப் பிறகு வெடியில்தான் மீண்டும் நடிக்கிறார். இடையில் ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் எதுவுமே கைகூடவில்லை.

கடைசியில் விக்ரமுடன் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே மகிழந்துபோயிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் மிகச் சிறந்த ஹீரோக்களில் ஒருவரான விக்ரமுடன் நடிப்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் வரும் நல்ல வாய்ப்புகளில் தொடர்ந்து நடிப்பேன்..", என்றார்.

மோகன் நடராஜன் தயாரிக்கும் இந்தப் படம் வரும் ஜூலை 15-ம் தேதி சேலத்தில் துவங்குகிறது.

Comments

Most Recent