Kollywood Kisu Kisu - தந்தைகுலத்துக்கு டோஸ் நடிகை கலக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

ஒல்லிப்பிச்சான் நடிகரோட தந்தைகுலம் தொழிலாளர் யூனியன் ஆட்கள் இல்லாமல், படம் பிடிச்சாராம்... பிடிச்சாராம்... இதைக் கேள்விப்பட்ட தொழிலாளர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயி தந்தைகுலத்துக்கு டோஸ் விட்டாங்களாம்... டோஸ் விட்டாங்களாம்... Ôஎன்னை விட்டுடுங்க. இனிமே இப்படி பண்ண மாட்டேன்Õனு தந்தைகுலம் கெஞ்சினாராம்... கெஞ்சினாராம்... பிறகு மன்னிச்சு விட்டாங்களாம்... விட்டாங்களாம்...

கான் நடிகை போடும் கவர்ச்சியாட்ட ஆல்பத்துக்கு அயல்நாடுகள்ல கடும் கிராக்கியாம்... கடும் கிராக்கியாம்... இப்போ புதுசா ஆங்கில வீடியோ ஆல்பத்துல நடிக்க மதர்லாந்து தேசத்துக்கு போயிருக்காராம்... போயிருக்காராம்... படத்துக்கு வாங்குற சம்பளத்தைவிட ஆல்பத்துக்கு நிறைய கிடைக்குதாம்... கிடைக்குதாம்...

நகைக்கடை நடத்துற கவர்ச்சி சோன நடிகை, படத் தயாரிப்புல இறங்கினாரு... இறங்கினாரு... சரியான அனுபவம் இல்லாததால, செலவு கணக்கை தாறுமாறா சொல்லி எல்லோரும் நல்லா சாப்பிட்டாங்களாம்... சாப்பிட்டாங்களாம்... இதனால நடிகை கலங¢கிப் போயிட்டாராம். ஜி காமெடியை வச்சு எடுக்கிற படத்தை, வேறொருத்தருக்கு கைமாத்தி விட்டுட்டாராம்... விட்டுட்டாராம்...

Comments

Most Recent