Kollywood Kisu Kisu - இயக்குனர் சபதம் சோகமான நடிகை நடிகருக்கு தடை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இன்ஷியல் பிரகாச இயக்குனர் தெலுங்கு படத்தை இயக்கி முடிச்சிட்டாரு. இந்த கதைய முதல்ல தமிழ்ல கில்லி நடிகர்கிட்டதான் சொன்னாரு. நடிகரு கதை சரியில்லேன்னு ஜகா வாங்கிட்டாரு... வாங்க¤ட்டாரு... அந்த கோபத்துல இந்த கதைய வேற தமிழ் ஹீரோகிட்ட சொல்லவே மாட்டேன்னு பிரகாச இயக்குனரு சபதம் பண்ணினாராம்... பண்ணினாராம்... இப்போ இந்த பட தமிழ் ரீமேக்குல அவரே நடிக்கப்போறாராம். போலீஸ் ரோலுங்கிறதால இயக்குனரு, ஜிம்மே கதின்னு கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்...

டைகர் வேஷ படத்தை மும்முரமா இயக்கிட்டு இருந்தாரு தாடிக்கார இயக்குனரு. திடீர்னு தெலுங்கு லக லக பார்ட் 2 வாய்ப்பு கிடைக்க, அங்கே போயிட்டாரு... போயிட்டாரு... டைகர் வேஷ படத்துக்கு பைனான்ஸ் பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனால அந்த படத்தை இயக்குனரு கண்டுக்காம இருக்கிறாராம். இந்த படம் மூலமா எப்படியோ ஒரு வாய்ப்பாவது கிடைச்சிதேன்னு சந்தோஷமா இருந்தாரு சாதா நடிகை. இப்போ சோகமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்...

இந்த¤ ஓபராய் நடிகர் மேல கோடம்பாக்கம் ஆட்கள் கோபமா இருக்கிறாங்களாம்... இருக்கிறாங்களாம்... Ôசென்னைக்கு வந்தா, Ôநானும் தமிழன்தான்Õனு நடிகரு பேசுறாரு. ஆனா தமிழ் திரையுலகம் புறக்கணிச்ச, இலங்கை பட விழாவுக்கு போயிருக்காரு. அவரோட இந்தி படங்களை இங்கே திரையிடக்கூடாதுÕன்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... நடிகரு முதல்முறையா தமிழ்ல நடிச்ச¤ருக்கிற ரத்தமான படமும் ரிலீசாகப்போகுது. அதுக்கும் தடை போடணும்னு கவுன்சில்ல குரல் எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்...

Comments

Most Recent