Milaka to be remade in Hindi | இந்திக்குப் போகும் மிளகா!: தீபிகா நடிக்கிறார்

http://thatstamil.oneindia.in/img/2010/06/17-deepika1200.jpg
நட்டு என்கிற நட்ராஜை தெரிந்திருக்கும். நாளை, சக்கரவியூகம் படங்களின் ஹீரோ. பாலிவுட்டில் பிரபலமான ஒளி்ப்பதிவாளர் இவர்.

இப்போது தமிழில் மிளகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, 'மாயாண்டி குடும்பத்தார்' கதாநாயகி பூங்கொடி நடித்துள்ளார். எஸ்.ரவிமரியா இயக்கியுள்ளார்.

இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதற்குள், 'மிளகா' படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை ரைசிங் சன் என்ற நிறுவனமும், 'கலைப்புலி' எஸ்.தாணுவும் சேர்ந்து வாங்கியுள்ளனர்.

இந்தி படத்தில் ஜான் ஆபிரகாம் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சுஜித் சர்க்கார் இயக்குகிறார்.

Comments

Most Recent