Mumaithkhan turns to Heroine role | கவர்ச்சி நடிகை முமைத்கான் கதாநாயகி ஆனார்!

http://www.dailomo.com/tamil/content_images/1/tamil_actress/mumaith-khan12.jpg

முமைத்கான் கதாநாயகியாக நடிக்க, தமிழ் - தெலுங்கு - இந்தி என பல மொழிகளில் தயாராகி ஒரே நாளில் அத்தனை மொழிகளிலும் வெளியாகவிருக்கும் படம் லவ் டாட் காம். இப்படத்தில் ‌பாரில் நடனமாடும் செக்ஸி டான்சராக நடிக்கும் முமைத்கானுக்கு ஜோடி மிக்கா. பணத்துக்காக கொலை செய்யும் வாடகை கொலையாளியாக நடிக்கும் ஹீரோ மிக்கா, பிரபல பஞ்சாபி பாடகர் தலர் மெகந்தியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்கா - முமைத்கான் ஜோடியின் லவ்.காம் படத்தை உதமம் பிக்சர் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசை பின்னணியில் நிகழும் பரபரப்பான ஆக்ஷன் கதையை உள்ளடக்கிய இப்படத்தை வினோத்முகி எனும் புதியவர் கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார். இசை- பப்பிலஹரி, வசனம் - ரமேஷ் என திறமையான கூட்டணி இணைந்திருக்கும் இப்படத்தில் முமைத்கான் இதுவரை இல்லாத அளவு படு கவர்சசியாக நடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

Comments

Most Recent