Now you can see Raavanan in youtube | யுட்யூப், பேஸ்புக், செல்போன்களில் ராவணன்!

http://thatstamil.oneindia.in/img/2010/06/22-raavan-6-200.jpg

மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் முழுப் படமும் செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. மேலும் யுட்யூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் முழுவதுமாக காண முடிகிறது.

இப்போதெல்லாம் யாருடைய படமாக இருந்தாலும் சரி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இன்டர்நெட்டில் பார்த்து விட முடிகிறது. அந்த அளவுக்கு பைரஸி பேய் தலை விரித்தாடி வருகிறது. அந்த பேயின் தாக்குதலுக்கு தற்போது ராவணனும் சிக்கியுள்ளது.

ராவணன் படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் ரிலீஸாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் செல்போனிலேயே முழுப் படமும் பார்க்கும்படி பரவ விட்டார்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் படம் யுட்யூப் இணையத்தளத்தில் நல்ல தரத்தில் பார்க்கும் வகையில் செய்து விட்டனர் புண்ணியவான்கள்.

இதுதவிர 20க்கும் மேற்பட்ட அண்டர்கிரவுண்ட் இணையத்தளங்களிலும் முழுப் படமும் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த விவரங்களையும் டவுன்லோட் லிங்குகளையும் ஃபேஸ்புக்கிலும் பரவச் செய்கிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிக் பிக்சர்ஸ் நிறுவனம், "வீடியோ பைரஸி பெரும் சவாலாக உள்ளது. மாற்று வழிகளும் தெரியவில்லை" என்று கூறியுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து போலீஸில் எந்த புகார்களும் பதிவு செய்யப்படவில்லை.

Comments

Most Recent