Entertainment
›
Cine News
›
Raavanan faces protests in Sri Lanka | ராவணன் வெளியான தியேட்டருக்கு தீ வைப்பு!
இலங்கையில் ராவணன் படம் திரையிடப்பட்ட தியேட்டரை தீ வைத்து எரித்து சிக்களர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் சில வாரங்க...
இலங்கையில் ராவணன் படம் திரையிடப்பட்ட தியேட்டரை தீ வைத்து எரித்து சிக்களர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் சில வாரங்களுக்கு முன், சர்வதேச சினிமா படவிழா நடந்தது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, இந்த படவிழாவில் தமிழ் நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் மணிரத்னம் ராவணன் படத்தை திரையிடப்பட மாட்டாது என்று அறிவித்ததுடன் தானும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். படவிழாவில் கலந்து கொள்ளாத நடிகர் - நடிகைகள் நடித்த படங்களை புறக்கணிப்போம் என்று சிங்களர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், டைரக்டர் மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு இருக்கிறது. இலங்கையிலும் ராணவன் திரையிடப்பட்டது. படத்தில் நடித்திருக்கும் நடிகர் - நடிகைகள், டைரக்டர் உள்ளிட்ட யாரும் இலங்கை விழாவில் கலந்து கொள்ளாததால் அங்கு ராவணன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ராவணன் படத்தை திரையிடவிருந்த மட்டகளப்பு பகுதியில் உள்ள தியேட்டருக்கு சிங்களர்கள் சென்று மிரட்டல் விடுத்தனர். இருப்பினும் ராவணன் படம் திரையிடப்பட்டது. இதனால் கோபமடைந்த சிங்களர்கள் தியேட்டருக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments
Post a Comment