நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜ்கிரண் மீண்டும் ஹீராவாக நடிக்க உள்ளார். ராஜ்கிரணின் சொந்த பட நிறுவனமான ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும...
நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜ்கிரண் மீண்டும் ஹீராவாக நடிக்க உள்ளார். ராஜ்கிரணின் சொந்த பட நிறுவனமான ரெட் சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் "திருமங்கலத்து யானை". இப்படத்தில் தானே ஹீரோவாக நடிக்க ராஜ்கிரண் முடிவு செய்துள்ளார். அஜித், சல்மான்கான், ஷாருக்கான் மாதிரி நபர்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் ஒரு பெண் கரடு முரடனான நபரை திருமணம் செய்துக் கொள்ளும் அனுபவங்கள்தான் திருமங்கலத்து யானை படத்தின் கதை. இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றைக் கூட ராஜ்கிரணேதான் எழுதுகிறார். "திருத்தணி', "பகடை', "சரித்திரம்', "காவல்காரன்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கும் ராஜ்கிரண், இந்தப் படங்கள் முடிந்த பின் "திருமங்கலத்து யானை'யை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
Comments
Post a Comment