Entertainment
›
Cine News
›
Rama Narayanan files Nomination For Producer''s Council Elections | தயாரிப்பாளர் சங்க தேர்தல்! ராம.நாராயணன் வேட்புமனு தாக்கல்
Rama Narayanan files Nomination For Producer''s Council Elections | தயாரிப்பாளர் சங்க தேர்தல்! ராம.நாராயணன் வேட்புமனு தாக்கல்
தயாரிப்பாளர்கள் கங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக ராம.நாராயணன் தலைமையிலான அணியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ் திரைப்பட தய...
தயாரிப்பாளர்கள் கங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக ராம.நாராயணன் தலைமையிலான அணியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஜூலை 11ம்தேதி நடைபெறுகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் ராம.நாராயணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை கே.ஆர்.ஜி. போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இவர ஏற்கனவே 8 ஆண்டுகள் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், பிலிம் சேம்பர் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தலைவராக இருந்து வருகிறார். போட்டி ஏற்பட்டிருப்பதால் வெற்றி யாருக்கு? என தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. இந்நிலையில், ராம.நாராயணனும், அவர் தலைமையில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ராம.நாராயணன் தலைவர் பதவிக்கும், அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கும், சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், காஜா மைதீன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த போட்டியில் தனக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொன்ன ராம.நாராயணன், கடந்த முறை நாங்கள் செயல்படுத்திய திட்டங்களே எங்களை வெற்றி பெற வைக்கும் என்றும் கூறினார்.
Comments
Post a Comment