Ravanan hits internet after the day of its release | அதற்குள் 'நெட்'டுக்கு வந்து விட்ட ராவணன்!

http://thatstamil.oneindia.in/img/2010/06/20-raavanan-2000.jpg
ராவணன் படம் திரைக்கு வந்த மறுநாளே இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது.

இப்போதெல்லாம் திரைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் இன்டர்நெட்டில் வெளியாகி விடுகின்றன புதிய படங்கள். விதி விலக்காக சரத்குமாரின் ஜக்குபாய் மட்டும் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை ஐஸ்வர்யாராய் நடித்துள்ள படம் ராவணன். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் இந்த படம் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன மறுநாளே இன்டர்நெட்டில் முழுமையாக வந்துள்ளது.

இன்டர்நெட்டில் குறிபிட்ட ஒரு முகவரியில் 5 பகுதிகளாக இந்த படம் வருகிறது. இந்த தகவல் சேலம் மாவட்டத்தில் பரவியுடன் மக்கள் குறிப்பிட்ட இன்டர்நெட் சென்டருக்கு சென்று செல்போனில் டவுன்லோட் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒருவர் கூறுகையில்,

ராவணன் படம் ரிலீஸ் ஆன அன்றே அதன் பாடல்கள் எல்லாம் இன்டர்நெட்டில் உள்ளதாக கேள்விப்பட்டேன். மறுநாளே படம் முழுவதும் இன்டர்நெட்டில் உள்ளதாக கேள்விப்பட்டவுடன் குறிபிட்ட முகவரியில் பார்த்த போது படம் முழுவதுமாக இருந்தது. பலரும் செல்போனில் இதை டவுன்லோட் செய்கிறார்கள்.

இது தியேட்டர் பிரிண்ட் போல உள்ளது. எனவே தெளிவாக இல்லை என்றார்.

புத்தம் புதுப் படங்கள் இப்படி சில மணி நேரங்களில் இன்டர்நெட்டுக்கு வந்து விடுவதைத் தடுக்க முடியாமல் திரையுலகினல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர்.
text

Comments

Most Recent