Entertainment
›
Cine News
›
Short film festival in Chennai | தமிழ் குறும்பட போட்டி: 1500 படங்கள் குவிந்தன!
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 'உலகத் தமிழ் குறும் படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் போட்டியில் பங்கேற்க 1500 தமிழ் குறும்படங்கள் குவிந்த...
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 'உலகத் தமிழ் குறும் படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் போட்டியில் பங்கேற்க 1500 தமிழ் குறும்படங்கள் குவிந்தன.
பச்சை என்கிற காத்து என்ற படத்தை தயாரித்து வரும் 'அ' திரை நிறுவனம் இந்த போட்டிகளை நடத்துகிறது.
குறும் படங்கள், ஆவணப் படங்கள், விளம்பர படங்கள் மற்றும் தமிழிசை தொகுப்புகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
உலகம் முழுவதும் இருந்து இதுவரை 1500 போட்டியாளர்கள் குறும்பட போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாகவும், படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 5-ந்தேதி என்றும் இப் போட்டிகளை நடத்தும் பச்சை என்கிற காத்து திரைப்பட இயக்குனர் கீரா, தயாரிப்பாளர்கள் அசுவத்தாமன், இந்துமதி, வைகறையாளன், தனலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
போட்டியில் வெற்றி பெறும் 25 படங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த குறும்பட விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னணி இயக்குனர்கள் ஒளிப்பதிளார்கள், கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

Comments
Post a Comment