Sorojadevi help to co-artist | வறுமையில் வாடும் நடிகைக்கு உதவிய சரோஜாதேவி

http://www.pkp.in/images/b/Saroja%20Devi.jpg
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வறுமையில் வாடிய துணை நடிகை ஒருவருக்கு மாஜி நடிகை சரோஜாதேவி பண உதவி செய்துள்ளார். திருடாதே உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கதை - வசனம் எழுதியவர் லட்சுமணனின் மனைவி சுசிலா. சினிமா துணை நடிகையான இவர் தற்போது சென்னை நந்தனத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் வீட்டுக்கு வாடகைப் பணம் கூட செலுத்த முடியாமல் வறுமையில் வாழ்ந்து வருகிறார் சுசீலா. இந்நிலையில் சமீபத்தில் வீட்டை காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்‌தென்று தெரியாமல் திகைத்த சுசீலா பெங்களூருவில் உள்ள சரோஜாதேவிக்கு போனில் பேசி உதவி கேட்டார். இதையடுத்து சரோஜாதேவி ரூ.20 ஆயிரம் பணத்தை சுசீலாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். சரியான நேரத்தில் தனக்கு உதவி செய்த சரோஜாதேவிக்கு துணைநடிகை சுசீலா நன்றி தெரிவித்துள்ளார். இவர் சரோஜாதேவியுடன் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Comments

Most Recent