Sura incurred heavy loss - Madurai theater oweners | சுறாவால் அதிக நஷ்டம்! மதுரை தியேட்டர் அதிபர்கள் வேதனை!!

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2009/12/vettaikaran-movie-new-photos-18.jpg
சுறா படத்தால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர். நடிகர் விஜய், தமன்னா, வடிவேலு நடித்து வெளியான படம் சுறா. இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கி தியேட்டர்களில் திரையிடப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. இதனால் தமிழகம் முழுவதிலும் சுறா படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் நஷ்டமடைந்தன. இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை‌ சேர்ந்தவர்கள் சென்னையில் அவசர கூட்டம் கூட்டினார்கள். கூட்டத்தில் சுறாவால் ஏற்பட்ட நஷ்டத்தை நடிகர் விஜய் ஈடுகட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நஷ்ட ஈடு தராவிட்டால் விஜய்யின் அடுத்த படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் தியேட்டர் அதிபர்கள் எச்சரித்தனர். நிலைமையை அறிந்த விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தியேட்டர் அதிபர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். அதில் சுமூகமான தீர்வு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மதுரை மாநகர் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பி.முத்து கிருஷ்ணன் தலைமையில் மதுரையில் தியேட்டர் அதிபர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராம.மு.அண்ணாமலை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மதுரை - ராமநாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும், சுறா படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சுறா படம் வெளியிட்ட வகையில் மதுரை, ராமநாதபுரம் திரையரங்குகளுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்ப்பட்டதால் நஷ்டத்தை ஈடுகட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வது, விஜய்யின் அடுத்த படம் ரீலிசிற்குள் இந்த நஷ்ட ஈடுத் தொகை கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Most Recent