தமிழ் திரையுலகில் இயக்கம், நடிப்பு, பாடலாசிரியர், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடன இயக்குனர், பின்னணி பாடகர் என எல்லா அவதாரங்களையும் எட...
தமிழ் திரையுலகில் இயக்கம், நடிப்பு, பாடலாசிரியர், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடன இயக்குனர், பின்னணி பாடகர் என எல்லா அவதாரங்களையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் நடிகர் டி.ராஜேந்தர். விஜய தேசிங்கு ராஜேந்தர் என்ற தனது பெயரை சினிமாவுக்காக டி.ராஜேந்தர் என வைத்துக் கொண்ட ராஜேந்தரை, அவரது ரசிகர்கள் டி.ஆர்.என அழைத்தனர். ஆரம்ப காலத்தில் தீவிர தி.மு.க. விசுவாசியாக இருந்து வந்த டி.ஆர்., கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சிய தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார். அவ்வப்போது அறிக்கைகளையும், பரபரப்பு பேட்டிகளையும் அளித்து வரும் ராஜேந்தர், தனது பெயரை ராசிக்காக விஜய டி.ராஜேந்தர் என மாற்றிக் கொண்டார். கையெழுத்தையும் விஜய டி.ராஜேந்தர் என்றே போட்டு வந்தார்.
இந்நிலையில் இப்போது தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என மாற்றிக் கொண்டுள்ளார் டி.ஆர்., இலங்கை பிரச்னை தொடர்பாக சமீபமாக அவர் வெளியிடும் அறிக்கைகளில், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் என்று குறிப்பிட்டிருப்பதுடன் டி.ராஜேந்தர் என்றே கையெழுத்திடுகிறார்.
Comments
Post a Comment