சிம்புவின் திர ை வாழ்க்கையில் முதல் டீசன்டான வெற்றி என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா. படம் ந ூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ...
சிம்புவின் திரை வாழ்க்கையில் முதல் டீசன்டான வெற்றி என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா. படம் நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக தனது நண்பர்களுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நட்சத்திர விடுதியில் மெகா பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய அனைவரும் ஆஜர். பார்ட்டிக்கு வராத ஒரே விஐபி, த்ரிஷா.
பார்ட்டிக்கு அவர் வராததற்கு காரணம் வேறொன்றுமில்லை. த்ரிஷா தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லையாம்.
சிம்பு அடுத்து வரலட்சுமியுடன் போடா போடி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இம்மாதம் லண்டனில் தொடங்குகிறது.
Comments
Post a Comment