டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் - ஜெனிலியா ஜோடி நடிக்கும் புதுப்படம் வேலாயுதம். காதலுக்கு மரியாதை படத்துக்கு பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் ...
டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் - ஜெனிலியா ஜோடி நடிக்கும் புதுப்படம் வேலாயுதம். காதலுக்கு மரியாதை படத்துக்கு பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த வேலாயுதம் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி வருகிற 15ம்தேதி காலை 9 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வேலாயுதம் பட தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் படம் போட்ட பனியன்களும், பிரியாணி விருந்தும் வழங்கப்பட இருப்பதாக வேலாயுதம் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.
Comments
Post a Comment