தெலுங்கில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, லேகா வாஷிங்டன், மனோஜ் நடித்த படம் ‘வேதம்’. இந்தப் படம் ஹிட்டாகி பரபரப்பாக தெலுங்கில் ஓடிக்கொண்டிருக்கிற...
தெலுங்கில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, லேகா வாஷிங்டன், மனோஜ் நடித்த படம் ‘வேதம்’. இந்தப் படம் ஹிட்டாகி பரபரப்பாக தெலுங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தமிழில் சிம்பு ஹீரோவாக நடிக்க, ‘வானம்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கில் ‘வேதம்’ படத்தை இயக்கிய கிரீஷ் இயக்குகிறார். இதில் அனுஷ்கா நடித்த கேரக்டரில் மீண்டும் நடிக்க, அவரை கேட்டனர்.
தெலுங்கில் விலைமாதுவாக நடித்திருந்த அனுஷ்கா, தமிழில் நடிக்க மறுத்தார். இதையடுத்து ஒரு பாடலுக்கு ஆட கேட்டனர். முதலில் மறுத்து அனுஷ்கா, ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர் தருவதாக சொன்னதும் சம்மதித்துள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக தெலுங்கு ஹீரோ மனோஜ் (மோகன்பாபு மகன்) நடிக்கிறார்.
Comments
Post a Comment