எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஜானகி சோணைமுத்து, தங்கம் சிவதாஸ் தயாரிக்கும் படம் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'. புதுமுகம் சரத் ...
எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஜானகி சோணைமுத்து, தங்கம் சிவதாஸ் தயாரிக்கும் படம் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'. புதுமுகம் சரத் ஹீரோ, மாலினி ஹீரோயின். திரைக்கதை, ரதிபாலா. கதை, எழுதி இயக்கும் ரவிபாரதி, நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு சனிக்கிழமை, சாயங்காலம் 5 மணிக்கு தொடங்கி, மறு சனிக்கிழமை 5 மணி வரை நடக்கும் ஒரு வார கால சம்பவங்களை கிரைம், திரில்லர், ஆக்ஷன், காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். எச்டிஎஸ்எல்ஆர் என்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ஸ்லம்டாக் மில்லினியர்' ஹாலிவுட் படத்தில் சில நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், இந்தியாவில் முதல்முறையாக எங்கள் படத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் சிதைந்துவிட கூடாது என்பதற்காக, எல்லா காட்சிகளையும் இரண்டு கேமராவில் படமாக்கினோம். திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள கோயிலில், நிஜ திருவிழா நடத்தி முக்கியமான காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
Comments
Post a Comment