சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் விமர்சியாக கொண்டாடினார்கள். இதையொட்டி அவரது ரசிகர்கள் சமூ...
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் விமர்சியாக கொண்டாடினார்கள். இதையொட்டி அவரது ரசிகர்கள் சமூக சேவையும் செய்தனர்.
திருவான்மியூர் முத்து லட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் சூர்யாவின் பிறந்த நாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்தனர்.
பின்னர் சூர்யா ரசிகர்கள் 60 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். சூர்யா பிறந்த நாளையொட்டி நடந்த சிறப்பு ரத்த தான முகாமில் ரசிகர்கள் 120 பேர் ரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா நற்பணி இயக்க மாநில அமைப்பாளர் எம்.எம்.ஆர். மதன் இந்த நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Comments
Post a Comment