Entertainment
›
Cine News
›
Actress Namitha refuses rumour on her suicide | நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!
Actress Namitha refuses rumour on her suicide | நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!
நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா...
நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா, ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவியுள்ளது.
முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீதா பற்றிய இந்த செய்தியால் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை நமீதாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நமீதா இப்போது மும்பை ஆம்ப்வேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அங்கு அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தற்கொலை வதந்தியைத் தொடர்ந்து நமீதா விரைவில் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment