கேரளாவிலுள்ள திருச்சூரில், புது பங்களாவில் குடியேறியுள்ளார் பாவனா. ஏற்கெனவே இருந்த வீட்டில், வாழை மற்றும் குட்டை மாமரங்கள் இருந்தன. அவற்றை...
கேரளாவிலுள்ள திருச்சூரில், புது பங்களாவில் குடியேறியுள்ளார் பாவனா. ஏற்கெனவே இருந்த வீட்டில், வாழை மற்றும் குட்டை மாமரங்கள் இருந்தன. அவற்றைப் பிரிய மனமின்றி, புதுவீட்டுக்கு வந்தார் பாவனா. இங்கு நிறைய பலா மரங்கள் இருக்கின்றன. இப்போது ஒவ்வொரு மரமும் பலா பழங்களால் நிரம்பி வழிகின்றன. பாவனாவை பார்க்க அவரது வீட்டுக்கு வரும் அனைவருக்கும் பலா பழம் கிடைக்கும். மேலும், பாவனாவின் தாயாருக்கு பலா பழத்தில் சிப்ஸ், பஜ்ஜி, பாயாசம் செய்ய வருமாம். அதை விருந்தினர்களுக்கு கொடுக்கிறார். பழ மரங்களை விரும்பும் பாவனாவுக்கு பெரிய விருப்பம் ஒன்றும் உள்ளது. அது பெரிய விவசாய பண்ணை அமைப்பது. அதற்காக, கேரளாவில் சில இடங்களில் காலி மனைகள் வாங்கிப் போட்டுள்ளாராம்.
Comments
Post a Comment